திருகோணமலையில் மன உளைச்சல் காரணமாக இளைஞனின் விபரீத முடிவு.

திருகோணமலையில் மன உளைச்சல் காரணமாக இளைஞனின் விபரீத முடிவு.

திருகோணமலையில் மன உளைச்சல் காரணமாக ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – மட்கோ பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயிலுடன் மோதியதாக தெரிவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மன உளைச்சல் காரணமாக இளைஞனின் விபரீத முடிவு | Trincomalee Young Man Died After Being Trainஇச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது .

போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாவும் தெரிய வருகின்றது மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.