யாழ் வைத்தியசாலையின் இடம்மாற்றப்பெற்றுள்ள கிளினிக் இடங்கள்!

யாழ் வைத்தியசாலையின் இடம்மாற்றப்பெற்றுள்ள கிளினிக் இடங்கள்!

யாழ் - போதனா வைத்தியசாலையின் சுபாஸ் விடுதியில் கடந்த மூன்று வருடங்களாக இயங்கிவந்த அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை (16.10.2023) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில், மருத்துவக் கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் அனைவரும் விக்டோரியா வீதியில் புதிதாகத் திறப்பட்டுள்ள நுழைவாயிலூடாக ( இல.9 B) வருகை தந்து வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற முடியும்.

யாழ் வைத்தியசாலையின் இடம்மாற்றப்பெற்றுள்ள கிளினிக் இடங்கள்! | Jaffna Hospitals Relocated Clinic Locations

அதேவேளை இதய சிகிச்சை கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் விக்டோரியா வீதியில் உள்ள வைத்தியசாலையின் 11 ஆம் இலக்க நுழைவாயிலூடாக வருகைதந்து இதய சிகிச்சை கிளினிக்கிற்குச் செல்ல முடியும்.

இது இதய சிகிச்சை விடுதிக்கு பின்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறும் - என்றுள்ளது.