மரத்துடன் மோதிய பேருந்து! மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்..!

மரத்துடன் மோதிய பேருந்து! மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்..!

தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.

மரத்துடன் மோதிய பேருந்து! மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம் | Bus Accident In Anuradhapuram Sri Lanka

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.