அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் பலி.

அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் பலி.

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயன்ற போது எதிரில் வந்த மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் பலி | Motorcycle Accident In Akkaraipattuவிபத்தில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த 51 மற்றும் 77 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பொத்துவில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மற்றவர் பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என்றும் , வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தேசமயம் விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.