யாழில் வீடுடைத்து நகைகளும் ஒரு தொகை பணமும் திருட்டு..!

யாழில் வீடுடைத்து நகைகளும் ஒரு தொகை பணமும் திருட்டு..!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சித்தங்கேணியில் உள்ள, வயதான இருவர் வசித்து வந்த வீட்டில் நேற்று அதிகாலை 02மணிக்கு இந்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய வீட்டின் புகைக்கூட்டினூடாக உள்நுளைந்த இருவர் இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் வீடுடைத்து நகைகளும் ஒரு தொகை பணமும் திருட்டு | Jewels Stolen In Vattukkottai Chittakeni Jaffna

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.