யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

யாழ் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கோப்பாய் - இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! | Gold Jewelery Stolen From A Ritual House In Jaffna  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்றையதினம் அதிகாலை 3.00 மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய போது அதனை காணவில்லை.

இந்த நிலையில் அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! | Gold Jewelery Stolen From A Ritual House In Jaffna

 

பின்னர் நகைகளை பார்த்த போதே நகைகள் திருட்டு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு, கோப்பாய் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.