வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் இழிவான நடந்துகொண்ட நபர்!

வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் இழிவான நடந்துகொண்ட நபர்!

வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் இழிவான நடந்துகொண்ட நபர்! | Person Misbehaved With A Jaffna University Student

அண்மையில் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை காட்டியவாறு பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்த ஒருவரை பல்கலைக்கழக மாணவி துணிகரமாக காணொளி பதிவு செய்துள்ளார்.

காணொளி எடுக்கப்படுவதை அவதானித்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பி கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் விரிவுரைகளை முடித்துவிட்டு பல்கலைக்கழக விடுதிகளுக்கும் தங்குமிடத்துக்கும் நடந்து செல்லும் போதும் வரும் போதும் வீதியால் வருகின்ற ஒரு சிலர் ஆணுறுப்பை காட்டி பாலியல் சைகைகளை செய்கின்ற போக்கு அதிகரித்து வருகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கடந்த காலங்களில் ஒரு சிலர் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொது மக்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.