யாழில் இரண்டு தரப்பினரிடையே மோதல் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.

யாழில் இரண்டு தரப்பினரிடையே மோதல் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இரண்டு நாள்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உள்பட்ட கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே சில நாள்களாக நீடித்த முரண்பாட்டு நிலை மோதலாக மாறியது.இந்த மோதலினால் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, இரண்டு தரப்பிலுமாக 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நபர்களைத் தாக்கியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் 23 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இன்று முற்படுத்தப்பட்டனர்.

யாழில் இரண்டு தரப்பினரிடையே மோதல் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Conflict Between Two Parties In Jaffna Court Orderகாவல்துறையின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 23 பேரையும் வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.