கணவனின் அநாகரிக செயல்:வெட்டிக் கொன்ற மனைவி.

கணவனின் அநாகரிக செயல்:வெட்டிக் கொன்ற மனைவி.

தான் பெற்ற மகளையே நிர்வாண படங்கள் எடுத்து அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்க முயன்ற கணவனை மனைவி வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெல்லவ காவல்துறை பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய கணவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளான அவர், வெளியே வந்த போது, மனைவி வெட்டிக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவனின் அநாகரிக செயல்:வெட்டிக் கொன்ற மனைவி | Film Daughter Naked Wife Killed Husbandதாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அண்மையில் யூடியூப் சனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தமை காவல்துறை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.      கணவனின் அநாகரிக செயல்:வெட்டிக் கொன்ற மனைவி | Film Daughter Naked Wife Killed Husband