4ஆம் நாள் ஆட்டம் நிறைவு - இமாய இலக்கை நோக்கிப் போராடும் இலங்கை!

4ஆம் நாள் ஆட்டம் நிறைவு - இமாய இலக்கை நோக்கிப் போராடும் இலங்கை!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்ட நிறைவில்  372 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்து ஆடிவரும் இலங்கை அணி, தனது 2 ஆவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக, தனது முதலாவது இன்னிங்சில் களம் இறங்கிய இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அதிரடி 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களின் உதவியுடன் 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்கள் குவித்தது. 

இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவன்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி, சோனல் தினுஷவின் போராட்டமிக்க 100 ஓட்டங்கள் மற்றும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்கள் சிறப்பான பங்களிப்பால் 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2 ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர். 

இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தற்போது இலங்கை அணி வெற்றிபெற இன்னும் 288 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில், தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடனும் சோனல் தினுஷ 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.