ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாவலர் கொலை: பணம் திருட்டு! பரபரப்பு சம்பவம்.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாவலர் கொலை: பணம் திருட்டு! பரபரப்பு சம்பவம்.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாவலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது, பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாவலர் கொலை: பணம் திருட்டு! பரபரப்பு சம்பவம் | Hatton Jumma Mosque Watchman Killed In Attackஇந்த சம்பவம் இன்றைய தினம் (09-12-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரண்டு ஆண்டுகளாக பாதுகாவலராக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த 67வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தின் போது அவரின் தலைப்பகுதியில் பலத்த காயமடையம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாவலர் கொலை: பணம் திருட்டு! பரபரப்பு சம்பவம் | Hatton Jumma Mosque Watchman Killed In Attack

" அதிகாலை 1 மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், பாதுகாவலரின் ஓய்வறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் வெளியே வந்து உண்டியலை உடைத்து பணத்தை திருட்டிச் சென்றுள்ளார்." என ஹட்டன் பள்ளிவாசலின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாமல் இருப்பதற்காகவே பாதுகாவலர் நியமிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர்.

நபர் பள்ளிக்குள் வருவது, உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் ஸ்தல பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணை, தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் இறங்கியுள்ளனர்.