
2024 ஆம் ஆண்டுக்கான 14ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்
யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்துடன் இணைந்து, வரையறுக்கப்பட்ட
'இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டை சேவைகள் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை 19.01.2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமானது.
இந்த வர்த்தக கண்காட்சி 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.