
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் திருமஞ்சம் வெள்ளோட்டம்!
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிவில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சம் வெள்ளோட்டம் எதிர்வரும் புதன்கிழமை 24.01.2024 காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
25.01.2024 வியாழக்கிழமை தைப்பூச திருநாளன்று மாலை 6 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற திருமஞ்சத்தில் பவனி வருவார் எனவும் இரண்டு தினங்களிலும். முருகப்பெருமான் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து வடம் பிடித்து அருளைப் பெறுமாறு ஆதீன கர்த்தா அறிவித்துள்ளார்.