ஹரிஹரன் இசை நிகழ்ச்சி குழுவினர் யாழ் வருகை!

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி குழுவினர் யாழ் வருகை!

ஹரிஹரன்‌ பங்கேற்கவுள்ள யாழ்ப்பாண இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும்‌ பிரபல தென்னிந்திய நடன இயக்குனர்‌ கலா மாஸ்டர்‌ யாழ்ப்பாணம்‌ வருகை தந்துள்ளனர்‌.

குறித்த குழு யாழ்ப்பாணம்‌ சர்வதேச விமான நிலையம்‌ ஊடாக இன்றைய தினம்‌ செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்‌.

யாழ்ப்பாணம்‌ முற்றவெளி மைதானத்தில்‌ எதிர்வரும்‌ 09ஆம்‌ திகதி ஹரிகரனின்‌ இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வில்‌ தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ்‌ , யோகி பாபு , சாண்டி மாஸ்டர்‌ , புகழ்‌ , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள்‌ கலந்து கொள்ளவுள்ளனர்‌.