இலங்கையில் பாடசாலை மாணவனின் உயிரை பறித்த பயங்கர விபத்து! இருவர் வைத்தியசாலையில்

இலங்கையில் பாடசாலை மாணவனின் உயிரை பறித்த பயங்கர விபத்து! இருவர் வைத்தியசாலையில்

மித்தெனிய வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் பாடசாலை மாணவனின் உயிரை பறித்த பயங்கர விபத்து! இருவர் வைத்தியசாலையில் | Car Hit A Power Pole Student Death Sri Lanka

உந்துருளியில் குறித்த மாணவர் தனது 2 நண்பர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் மாணவன் உயிரிழந்த நிலையில், காயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பாடசாலை மாணவனின் உயிரை பறித்த பயங்கர விபத்து! இருவர் வைத்தியசாலையில் | Car Hit A Power Pole Student Death Sri Lanka

இச் சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.