ஊரடங்கு குறித்த முக்கிய தீர்மானம் இன்று!

ஊரடங்கு குறித்த முக்கிய தீர்மானம் இன்று!

ஊரடங்கின் மூன்றாம் கட்டமாக தளர்த்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய சூழ்நிலை குறித்து அவர் ஆலோசிக்கவுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பரவி வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவும் மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், மூன்றாம் கட்ட தளர்வு 3.0இன் படி தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதவளத்துறை அமைச்சகம் சார்பில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர், கல்வி நிலையங்களை திறக்க ஆதரவு தரவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக மூன்றாம் கட்ட தளர்வு 3.0இன் படி மெட்ரோ ரயில் சேவைக்கு மட்டுமின்றி, கல்வி நிலையங்களை திறப்பதற்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம், திரையங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் தனிமனித இடைவெளியை உறுதி செய்து இயங்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மோடியின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது