யாழ்ப்பாண பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டளைகள் !

யாழ்ப்பாண பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டளைகள் !

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்த சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டளைகளை இன்று (17) முற்பகல் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க வழங்கினார்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டளைகள் ! | Special Orders For Jaffna Policeஅத்தோடு, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக உள்ள குற்றச் செயல்களை விரைந்து தடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டளைகள் ! | Special Orders For Jaffna Policeபோதைப்பொருள் விற்பனையை தடுத்தல், அதன் பாவனையை முற்றாக ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளை பொலிஸார் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளையும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வழங்கினார்.