
யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி
”ஆரோக்கிய சமூகமாய் வாழ்வோம் ” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழில் மரதன் ஓட்டப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த மரதன் ஓட்டப்போட்டியானது இம்மாதம் 25 ஆம் திகதி (25.02.2024) யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை நோக்கி 11.5 கிலோ மீற்றர் தூரத்திற்கு இடம்பெறவுள்ளது.
தினமும் சில மணித்துளிகள் நம் ஆரோக்கிய வாழ்வுக்காய் நடப்போம், ஓடுவோம், உடல் உழைப்பால், உடல் நலம் பேணுவோம் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மரதன் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த போட்டியில் நீங்களும் போட்டியாளர்களாக பங்குபற்ற விரும்பினால் 077 513 4348 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.