டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!

கடந்த பெப்ரவரி மாதத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.4 சதவீதமாக வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி ஏனைய நாணய அலகுகளுக்கு நிகராகவும் இலங்கை ரூபா வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு | Increase In Value Of Sri Lanka Rupee

இதற்கமைய, இந்திய ரூபாவுக்கு நிராக 4.2 சதவீதமாகவும், யூரோவுக்கு நிகராக 6.8 சதவீதமாகவும், ஸ்ரேலிங் பவுன்ஸ்க்கு நிகராக 5 சதவீதமாகவும் இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலிய டொலருக்கு நிகராக 9.8 சதவீதமாகவும், ஜப்பானிய யென்னிற்கு நிகராக 10.8 சதவீதமாகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.