வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்ற ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அந்தந்த நாடுகளில் இருந்து வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சிவில் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம் | Sri Lankans Living Abroad Vote Future Elections

இந்நிலையில், சிவில் அமைப்பின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் சாதகமான பதிலை வழங்கியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.