
விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியின் இறுதி நாள் இன்று
இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி கடந்த 3ஆம் ஆரம்பமானது.
கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி, ஐந்து கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது.
அதன் முதல் நாளான கடந்த ஞாயிற்றுகிழமை, கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான குறித்த போட்டி கண்டி வரையில் முன்னெக்கப்பட்டது.
இரண்டாம் நாள், கண்டியிலிருந்து பொலன்னறுவை வரையிலும் மூன்றாவது நாள் பொலன்னறுவையிலிருந்து திருகோணமலை வரையிலும் முன்னெடுக்கப்பட்டது.
நான்காவது நாளான நேற்று திருகோணமலையில் இருந்து வவுனியா வரை முன்னெடுக்கப்பட்;ட குறித்த துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இன்றைய இறுதி நாளில் வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், குறித்த போட்டியின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக விமானப் படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.