
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக விசேட போக்குவரத்துச் சேவை..!
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டத்தை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை குறித்த சேவையை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தொடருந்து திணைக்களம் மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.