பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு! ரணில் வழங்கிய வாக்குறுதி..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு! ரணில் வழங்கிய வாக்குறுதி..!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து இன்று (16) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, இடம்பெற்ற இந்நிகழ்வில், விளையாட்டு மற்றும் கலாச்சார அம்சங்கள் பலவும் உள்ளடக்கியிருந்தன, இந்தப் புத்தாண்டு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வருகைத் தந்த ரணில் விக்ரமசிங்க இங்கு சில போட்டிகளைக் கண்டுகளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களும் பரிசுகளை வழங்கினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு! ரணில் வழங்கிய வாக்குறுதி | Upcountry People Salary Increment Ranil Promiseசித்திரைப் புத்தாண்டு நிகழ்வை கண்டுகளிக்க வந்த பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, அப்போது மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருவதாக உறுதி அளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிறிலங்கா அதிபர் ரணில்,

"சம்பளம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது, தொழிற்சங்கங்கள் என்ன செய்ய போகிறார்கள் என கேட்க உள்ளேன், இப்போதைக்கு இதை பெற்றுக் கொள்வதே சிறந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு! ரணில் வழங்கிய வாக்குறுதி | Upcountry People Salary Increment Ranil Promiseஇதற்கு பின்னர் 1-2 ஏக்கர் காணி, உங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது, நீங்கள் தொழிற்சங்கங்கள் ஊடாக 1500 ரூபாய் கேட்டீர்கள். அதில் 1000 ரூபாய் வழங்க அவர்கள் தயாராக உள்ளனர். 

மிகுதித் தொகையினை கொடுப்பனவில் எடுக்க முடியும் என்று என்னிடம் கூறினார்கள், இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் என்றார்."