பூனையால் தகராறு; கணவரைத் தாக்கியதை கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம்

பூனையால் தகராறு; கணவரைத் தாக்கியதை கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம்

வளப்பு பூனையை தேடுகையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் சகோதரர், பெண்ணின் கணவரைத் தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் தென் மாகாணத்தில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதி ஒருவரே தாக்குதலுக்குள்ளான நிலையில், அவரது மைத்துனரான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு 45 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். நீதிபதி தாக்கப்பட்டமை தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பூனையால் தகராறு; கணவரைத் தாக்கிய கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம் | Wife Dies Of Shock Witnessing Husband Assault

சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது அதிர்ச்சியடைந்த மாவட்ட நீதிபதியின் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய சப்-இன்ஸ்பெக்டரின் சகோதரியை , மாவட்ட நீதிபதி திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதி மனைவியுடன் ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தாண்டுக்காக தனது மனைவியின் தாயார் வசிக்கும் காலியில் உள்ள வீட்டிற்கு சென்றபோது , தங்கள் செல்லப் பூனையையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

பூனையால் தகராறு; கணவரைத் தாக்கிய கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம் | Wife Dies Of Shock Witnessing Husband Assaultபுத்தாண்டைக் கொண்டாடிவிட்டு, ஏப்ரல் 14ம் திகதி இரவு வீடு திரும்பத் தயாராகி விட்ட நிலையில் அவர்களால் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது வீட்டில் பூனை இல்லாததால் நீதிபதி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பூனையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பூனையைத் தேடும் போது நீதிபதிக்கும் அவரது மைத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டரன மைத்துனர், நீதிபதியை அறைந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

பூனையால் தகராறு; கணவரைத் தாக்கிய கண்ட மனைவி அதிர்ச்சியில் மரணம் | Wife Dies Of Shock Witnessing Husband Assault

இது தொடர்பில் மாவட்ட நீதிபதி அக்மீமன பொலிஸாருக்கு அறிவித்து முறைப்பாடு செய்திருந்தார். அங்கு சென்ற பொலிஸார் விசாரணையின் போது, அதிர்ச்சியில் இருந்த நீதிபதியின் மனைவி நெஞ்சுவலி இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர், அவரை காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகவும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.