 
                            த்ரிஷாவை தொடர்ந்து இளம் நடிகையையும் விட்டு வைக்காத Goat
விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.
லியோ படத்தை தொடர்ந்து Goat படத்திலும் விஜய்யுடன் திரிஷா இணைந்துள்ளார். ஆனால், இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே திரிஷா நடனமாடியுள்ளார். ஆம், அந்த பாடல் காட்சி சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரிஷாவை தொடர்ந்து 22 வயது சென்சேஷன் நடிகை ஒருவரையும் Goat படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறாராம். அவர் வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீ லீலா தான். தெலுங்கில் பட்டையை கிளப்பி வரும் இவர் தற்போது Goat படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், ஸ்ரீலீலாவின் நடனம் எப்படி இருக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

 
                     
                                            