காதல் உறவை முறித்த மாணவி; சமூக ஊடகங்களில் வெளியான ஆபாச புகைப்படங்களால் அதிர்ச்சி

காதல் உறவை முறித்த மாணவி; சமூக ஊடகங்களில் வெளியான ஆபாச புகைப்படங்களால் அதிர்ச்சி

சமூக ஊடகங்களில் மாணவியின் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காதல் உறவை முறித்த மாணவி; சமூக ஊடகங்களில் வெளியான ஆபாச புகைப்படங்களால் அதிர்ச்சி | Obscene Photos Of Student On Social Media

கைதான் இளைஞர் நுகேகொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்குச் சென்றுள்ள நிலையில் அங்கு மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவர் ஒரு வகை மருந்துகளைப் பயன்படுத்துவதாகச் மாணவிக்குத் தெரியவந்துள்ள நிலையில்  ,இளைஞர் ஒருவித காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ள காதலி அறிந்ததை அடுத்து காதல் உறவை முறித்துள்ளார்.

காதல் உறவை முறித்த மாணவி; சமூக ஊடகங்களில் வெளியான ஆபாச புகைப்படங்களால் அதிர்ச்சி | Obscene Photos Of Student On Social Media

இதனையடுத்து, மாணவி  மற்றுமொரு இளைஞரொருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதை  அறிந்துகொண்ட சந்தேக நபரான இளைஞர், மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்த காலத்தில் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த மாணவியின் நண்பர்கள் சிலர் இது தொடர்பில் மாணவிக்குத் தெரிவித்ததையடுத்து , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கெஸ்பாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.