
தடைக்கு மத்தியிலும் வந்து குவிந்த பல்லாயிரக்கணக்கான வாகனங்கள்
இறக்குமதி தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் கூட 44,430 வாகனங்கள் சந்தைக்கு வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) நேற்று(07) தெரிவித்தார்.
அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்களும் 6,286 கார்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக வாகன இறக்குமதியாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிப்பாகங்களை மாற்றி விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இக்கலந்துரையாடலில் பல உள்ளூர் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் வாகன இறக்குமதிக்கும் அனுமதி வழங்குவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடல் இடம்பெற்றது.