திடீரென இடிந்து வீழ்ந்த மூன்று மாடி கட்டிடம்!

திடீரென இடிந்து வீழ்ந்த மூன்று மாடி கட்டிடம்!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று இன்று சனிக்கிழமை (06) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த கட்டிடம் 200 அடி பள்ளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது.

திடீரென இடிந்து வீழ்ந்த மூன்று மாடி கட்டிடம்! | A Three Storey Building Collapsed Suddenly

இந்த கட்டிடம் இடிந்து விழும் போது அங்கு எவரும் இல்லை எனவும், தரமற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்டதால் இவ்வாறு இடிந்து விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.