சொகுசு வாகனங்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு முக்கிய தகவல்

சொகுசு வாகனங்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு முக்கிய தகவல்

அதிக பெறுமதி கொண்ட சுமார் 700 சொகுசு வாகனங்கள் இன்னும் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (2024.07.10) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சொகுசு வாகனங்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு முக்கிய தகவல் | Another Announcement Regarding Luxury Vehicles

தற்போது அதிக பெறுமதி கொண்ட சுமார் 700 சொகுசு வாகனங்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதுடன், இந்த வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது.

இந்த வாகனங்களின் பல உபகரணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாகனங்களுக்கு வரி விதித்து விலக்கு அளிக்க முடியாவிட்டால் ஏலம் விடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.