இலங்கை ஜனாதிபதி தேர்தல்; இன்று இறுதி நாள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்; இன்று இறுதி நாள்

இலங்கையில் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக   தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றுவரை (13) வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்; இன்று இறுதி நாள் | Sri Lankan Presidential Election Today Last Day

அதோடு 16 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும்  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.