பெற்றோர்களால் நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்! வெளியான எச்சரிக்கை

பெற்றோர்களால் நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்! வெளியான எச்சரிக்கை

நாட்டில் 5 ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சில பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தங்களினால் அவர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் டிபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களால் நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்! வெளியான எச்சரிக்கை | 05 Scholarship Students Whose Parents Are Ill

எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக பெற்றோர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் அழுத்தங்களினால் வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் உழைப்பு இல்லாமை போன்ற பல உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக நிபுணர் வைத்தியர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு வைத்தியசாலையில் இருந்தும் பல நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

பெற்றோர்களால் நோய்வாய்ப்படும் புலமைப்பரிசில் மாணவர்கள்! வெளியான எச்சரிக்கை | 05 Scholarship Students Whose Parents Are Ill

இதேவேளை, குழந்தைகளின் மன நிலையை பாதிக்காமல் அவர்களின் கல்விக்கு ஆதரவாக பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் வைத்தியர் கேட்க்கொண்டுள்ளார்.