வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

அவ்வாறான விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனவும், அவ்வாறாக விளம்பரங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning Issued By Sri Lanka Police Vehicle Owners

உறுதியாக இணைக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை அகற்றுவது வாகனத்திற்கு சேதம் விளைவிக்கலாம் என்றும் தல்துவா குறிப்பிட்டார்.

பொலிஸாரின் இவ்வாறான தலையீட்டைத் தவிர்க்க வாகன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து இந்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்