இலங்கையில் தொடர் அதிகரிப்பில் டொலரின் பெறுமதி!

இலங்கையில் தொடர் அதிகரிப்பில் டொலரின் பெறுமதி!

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 72 சதம், விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 1 சதம்.

இலங்கையில் தொடர் அதிகரிப்பில் டொலரின் பெறுமதி! | Value Of The Dollar To Increase Sri Lanka

அதோடு ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபாய் 55 சதம், விற்பனைப் பெறுமதி 405 ரூபா 73 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 51 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 19 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபாய் 11 சதம், விற்பனைப் பெறுமதி 366 ரூபாய் 6 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 49 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 30 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 58 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 238 ரூபாய் 85 சதம்.

மேலும் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 9 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 18 சதம் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.