நாளை ஜனாதிபதியாக அனுர பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்

நாளை ஜனாதிபதியாக அனுர பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நாளை காலை 9 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத்தேர்வுகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள அவருக்குப் பல அரசியல்வாதிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.