இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 293.50 ரூபாவாகவும், 302.56 ரூபாவாகவும் உள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு! | Increase In The Value Of The Sri Lankan Rupeeகடந்த வாரம் (27) அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 295.30 ரூபாவாகவும், 304.33 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று அதிரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.