நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (05.10.2024) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! | Weather Alert In Sri Lanka 05 10 2024இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! | Weather Alert In Sri Lanka 05 10 2024

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.