காவல்துறையினர் அறிமுகப்படுத்திய புதிய அவசர தொலைபேசி இலக்கம்

காவல்துறையினர் அறிமுகப்படுத்திய புதிய அவசர தொலைபேசி இலக்கம்

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் முறைப்பாடளிக்க காவல்துறையினரால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் படி, 1997 என்ற தொலைபேசி எண் மூலம் அரசை சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்த முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.

இதேவேளை, சரியான தகவல்களை வழங்குவோருக்கு காவல்துறையினரால் சன்மானம் வழங்கப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், தகவல் அளிப்பவரின் ரகசியத்தன்மையும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் அறிமுகப்படுத்திய புதிய அவசர தொலைபேசி இலக்கம் | Hotline To Report Misuse Of Govt Property

அத்துடன், அண்மையில் பேருந்து நடத்துநர்களின் முறைக்கேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.