இலங்கை வரலாற்றில் முதன்முறை... தேர்தலில் போட்டியிடும் திருநங்கை!

இலங்கை வரலாற்றில் முதன்முறை... தேர்தலில் போட்டியிடும் திருநங்கை!

இலங்கை தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றை இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா படைத்துள்ளார்.

சானு நிமேஷா, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறை... தேர்தலில் போட்டியிடும் திருநங்கை! | First Transgender Compete In Sri Lankan Elections

இதன்போது, “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், முதன் முறையாக தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்தேன்” என, நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.