இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம், இன்று (07.03.2025) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு! | Sri Lanka Weather Forecast In Tamil

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் நிலை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.