இலங்கையில் கடன் அட்டை பயன்பாடு அதிகரிப்பு; திண்டாடும் மக்கள் !

இலங்கையில் கடன் அட்டை பயன்பாடு அதிகரிப்பு; திண்டாடும் மக்கள் !

இலங்கையில் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் புதிய கடன் அட்டைகளும் கடன் அட்டை பயன்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1,951,654 ஆக இருந்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 1,970,130 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடன் அட்டை பயன்பாடு அதிகரிப்பு; திண்டாடும் மக்கள் ! | Credit Card Usage Is Increasing In Sri Lanka

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 202 3ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டது.

அதனுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டு கடன் அட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் கடன் அட்டை பயன்பாடுகளால் கிடைக்கப்பெற்ற நிலுவைத் தொகை 151,614 மில்லியன் ரூபாவாக காணப்பட்டதுடன் ல், டிசம்பர் மாதமளவில் 157,957 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.