துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்

துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்தவர் 39 வயதுடைய நல்லதம்பி நித்தியானந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் | Police Officer Injured In Gunshot Kalmunai

வழமைபோன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியை பெற்றுக்கொள்வதற்கு ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றினை பெற சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பான நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த கைத்துப்பாக்கியை பரிசீலனை செய்வதற்காக மேசையில் வைத்த வேளை கைத்துப்பாக்கி தவறி வெடித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.