எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Heavy Rain Expected Country In The Next 36 Hours

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.