உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை; தமிழர் பகுதியில் சம்பவம்

உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை; தமிழர் பகுதியில் சம்பவம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (22) உழவு இயந்திரத்தில்  உழுது கொண்டிருக்கும் போது அருகில் இருந்த இளைஞன், தவறி வீழ்ந்து  கலப்பைக்குள் அகப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை; தமிழர் பகுதியில் சம்பவம் | Plow That Took The Life Of A Friendஉழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.