
இலங்கையில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும்.
அத்துடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.