
திருகோணமலை டிப்பர் வாகன விபத்தில் முதியவர் பலி
கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் இடம் பெற்ற டிப்பர் வாகன விபத்தில் 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, நேற்று(30.05.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனத்தில் துவிச்சக்கர வண்டி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முதியவரை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025