யாழில் வீதியில் நின்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்ற நபர்!

யாழில் வீதியில் நின்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்ற நபர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தச் சென்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்று மோசடி செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பளை மாசார் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வேலைக்காக சென்றவேளை நேற்று மாலை தனது துச்சக்கர வண்டியை குறித்த பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக சென்றுள்ளார்.

துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு செல்ல முற்பட்ட போது எதிரே வந்த ஒருவர் 'உன்னை எனக்கு தெரியும்' என்று கூறி அடாவடித்தனமாக குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்தைத் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் குறித்த குடும்பஸ்தருக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரியாததால் தான் தொலைபேசி பாவிப்பதில்லை எனது தொலைபேசி இலக்கத்தை தர முடியாது என கூறியுள்ளார்.

யாழில் வீதியில் நின்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்ற நபர்! | Man Stole Money From Familyman In Jaffnaஉடனே எதிரே நின்றவர் குடும்பஸ்தரின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அவரது பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பணப்பையை இழந்தவர் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் கடமையிலிருந்தவரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதற்கு துவிசக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் இருந்தவர் பணப்பையை பறித்துச் சென்றவர் என்னுடைய தம்பி என்றும் நாளைய தினம் நான் அந்த பணப்பையை அவரிடமிருந்து பெற்றுத் தருகிறேன் நீங்கள் இப்போது வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறி 500 ரூபாய் பணத்தினை கொடுத்து அவரை அனுப்பியுள்ளார்.

இரவு நேரமாகையால் வேறு வழி தெரியாத குடும்பஸ்தர் பேருந்துக்காக அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு சென்றுள்ளார்.

மறுநாள் காலை பணத்தை இழந்த குடும்பஸ்தர் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்திற்குச் சென்று தனது பணப்பையையிலிருந்த வங்கி ஏ.ரி.எம் அட்டை, அடையாள அட்டை அடங்கிய பணப்பையை தருமாறு கேட்ட போது தம்பியிடம் வாங்கியதாக துரிச்சக்கர வண்டி நிலையத்திலுள்ளவர் குடும்பஸ்தரிடம் கொடுத்துள்ளார்.