2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | 2025 Advanced Level Examination Date Announcement

பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.