இராணுவ வீரரான தந்தை கண் முன்னே பாடசாலை மாணவனுக்கு நடந்தேறிய துயரம்

இராணுவ வீரரான தந்தை கண் முன்னே பாடசாலை மாணவனுக்கு நடந்தேறிய துயரம்

புத்தல - கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ வீரரான தந்தை கண் முன்னே பாடசாலை மாணவனுக்கு நடந்தேறிய துயரம் | Horrific Crash Kills Student

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை உயிரிழந்த மாணவனின் தந்தையான இராணுவ வீரர் ஒருவரே செலுத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.