பொலிஸாரின் இரகசிய தகவலையடுத்து அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பொலிஸாரின் இரகசிய தகவலையடுத்து அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் இரகசிய தகவலையடுத்து அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு | Body Unidentified Woman Recovered Police Tip Off

அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் கருப்பு, மஞ்சள் நிற உடை மற்றும் கருப்பு குட்டைப் பாவாடை அணிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.