தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; தீவிர விசாரணையில் பொலிஸார் | Shooting Continue Colombo Police Investigating

கொஸ்கட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலம்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர், கொஸ்கட பகுதியை சேர்ந்த 24 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.